ஒரு பேருந்துப்பயணம்…….
முன் இருக்கையில் நீ…
பின் இருக்கையில் நான்…
ஜன்னல் வழிவந்த காற்றில்
என்னை நோக்கி(ச்) சிதறிக்கிடந்த
உன் கூந்தலின் ஒரு முடியை நான் எடுப்பதற்காய்
உனக்குத் தெரியாமல்
மூன்று மணிநேரம் முயன்று
முடியாமல் தோற்றுப்போனதை
இப்போது நினைத்தாலும் இனிக்கிறது..
.அன்பே அந்தகால நினைவுகள்..!
Comments
Post a Comment