பெற்றோர்கள் மாற வேண்டும்...!

பிடித்த காதலை பிடுங்கி எடுத்து விட்டு,
கட்டாய தாலியில் தலைகுனிய வைக்கும் பெற்றோர்களே…!

சாதி ,மதம் கலப்படம் இல்லாத இதயத்தில்
காதலை வாழ வைக்கும் அன்பான உள்ளங்களை
“பெத்த பாசம்”
என்று பாடம் சொல்லி பாதியிலே பிரித்து வைக்கும்
பெற்றோர்கள் மாறவேண்டும்
மாற்ற வேண்டும்….!

Comments