அனாதை-Anaathai

மறந்துவிடாதே

நான் கருவில் உருவான போதே கலைக்க மறந்த நீ
நான் பிறந்ததும் கள்ளிப்பால் கொடுக்கவும்
மறந்துவிட்டாய்.

… நான் உன் வயிற்றில் இருந்த போது உதைத்தேன் என்பதற்காகவா என்னை இந்த நரகத்தில் தனியே விட்டு வதைக்கிறாய்?

நீ முத்தமிட்ட எச்சில் கூடக் காயவில்லை அதற்குள் எங்கு சென்றாய் என்னை இந்த குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு?

ஆனால் பாரதி கண்ட புதுமைப் பெண் நீதானோ?
அனாதை என்றொரு ஜாதியையே எனக்காக உருவாக்கிவிட்டாய்!!!

உன் தொப்புள் கொடியை அறுத்த நீ உன் கருவறையையும் அறுத்தெறிய மறந்துவிடாதே.

காரணம்…

வேண்டாம் அதில் இன்னொரு அனாதையின்
“ஜனனம்” !!

Comments