Unnai Pidikkum

ஒரு பார்வையால ஒராயிரம்

கதை சொல்லி

என்னை பதறவைக்கும் உன்

கண்கள் பிடிக்கும். . !

நிலவுக்குள் மின்னலடித்தது போல்

என்னை நோக்கி

நீ வீசும் உன் புன்னகை

பிடிக்கும். . !

நள்ளிரவில் தெரியும் நட்சத்திரமாய்

உன் கூந்தலில் ஒய்யாரமாய்

உட்கார்ந்திருக்கும்

ஒற்றை ரோஜா பிடிக்கும். . !

ஆயிரம் பேருக்கு மத்தியில்

நீ வந்தாலும்

உன்னை எனக்கு உணர்த்தும்

உன் கொலுசின்

ஒலி பிடிக்கும். . !

தேர் கொண்ட பார்வையால் நான்

பார்க்கும் போதெல்லாம்

நானிக் கவிழும் உன்

பெண்மை பிடிக்கும். . !

உன்னில் எல்லாம் எனக்கு

பிடித்துப்போக

நீ எப்போது உன் செல்விதழால்

சொல்வாய்

என்னை பிடிக்குமென்று.

Comments