பூக்களும் வர்ணமும் சேர்ந்து தொடுத்த
நந்தவன தேருக்கு
இன்று பிறந்த நாள்
கல்லும் உளியும் சேர்ந்து வடித்த
சிற்பத்திற்கு
இன்று பிறந்த நாள்
தமிழும் இலக்கணமும் சேர்ந்து எழுதிய
கவிதைக்கு
இன்று பிறந்த நாள்
இசையும் குரலும் சேர்ந்து படித்த
பாட்டுக்கு
இன்று பிறந்த நாள்
கடலும் காற்றும் சேர்ந்து கொடுத்த
அலைக்கு
இன்று பிறந்த நாள்
சந்திரனும் சூரியனும் அளித்த ஆலோசனை படி
இந்திரன் படைத்த என் அழகு சுந்தரிக்கு
இன்று பிறந்த நாள்
என் உடலும் உள்ளமும் ஒன்றாய் சேர்ந்து
உயிரின் உருவமாய் நிற்கும்
என் தோழிக்கு இன்று பிறந்த நாள்
என் இனியவளே உனக்கு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
என்றும் உன்னை என்னுள் வைத்திருக்கும் உன் நண்பன்…!
Comments
Post a Comment