பள்ளி நினைவுகள்-school memories

நண்பர்களே இது என்னோட பத்தாம் வகுப்பு கவிதை
பிடித்து இருந்தால்
மறக்காமல் கமெண்ட் செய்யவும்

பள்ளி நாட்களில் நாங்கள் கண்ட இன்ப துன்பம்
என்றும் மறவாது
என்றும் நிலைத்து இருப்பது என்றும் அழியாதது

ஆண்கள் பெண்களிடம் பூத்த பூ
நட்பு என்னும் அழியா பூ

ஆசிரியர் மாணவரிடம் பூத்த பூ
அன்பு என்னும் அழகான பூ

பள்ளி மாணவர்களிடம் பூத்த பூ
நகைப்பு என்னும் நகைசுவை பூ

தலைமை ஆசிரயர் மற்றும் மாணவரிடம்
பூத்த பூ
வெறுப்பு என்ற வெந்த பூ

 இதை எல்லாம் கடந்த நாங்கள்
பள்ளி இறுதி நாளில்
நாங்கள் ஒன்றாக கூடிய வேளையில்

பிரிவு என்ற சோகம் வந்தது

நாங்கள் செய்த சேட்டைகளால்  பெற்ற
தண்டனையோ பல

அன்றெல்லாம் சிறிதும் வருந்தாத நாங்கள்
இன்று வருந்துகிறோம்

பெருகியது வெள்ளம்
ஒவ்வொரு மாணவரின் கண்களிலும்  

ஆனால் நாட்கள் உண்டு
என்றாவது ஒரு நாள் இணைவோம்

அது வரை நாங்கள் எங்கு இருந்தாலும்
எங்கள் நட்பு தொடரும்

இப்படிக்கு ,
நட்புடன் ,
அரவிந்த் யோகன் .

Comments