வாழ்த்துக்கள் சொல்ல
வார்த்தைகள் தேடி
வாசல்வரை வந்துநின்றேன்!
நீங்கள்
காதல் பேசி
கவிகள் பேசி
வார்த்தைகள் யாவற்றையும்
வசமாக்கி விட்டீரோ?
வார்த்தைப்
பஞ்சத்திலே நான்!
நீவீரோ மஞ்சத்திலே!
வாழ்த்துக்கள் உங்களுக்கு!
வாழ்க பல்லாண்டு!
நிலாவின் கைப்பற்றி
நிறைவிழா காணும்மணமகனிற்கு வாழ்த்துக்கள்!
தமிழன்னை மடியில்
தவழ்ந்த மைந்தனை
தன்மடி தாங்கும்மணமகளுக்கும் வாழ்த்துக்கள்!
வாழ்க்கை என்பது
வளைவுகள் நிரம்பிய
வசந்தப்பாதை!
இன்பமும் இனிதே நிறைந்தது!
இன்பத்தில் இணைந்தே வாழ்க!
தென்றலின் சாமரவீச்சில்
திங்களின் ஒளி ஒத்தடத்தில்
மங்கள நாளில்
மணமக்கள் மகிழ்வுடன் வாழ்க!
Comments
Post a Comment