சுயமரியாதையே மனிதனின் சிறந்த அடையாளம்!
அதை இழந்து வாழ்வது மிகப் பெரிய அவமானம்.
சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வது
எளிதான காரியமல்ல.
பல துன்பங்களை எதிர்கொள்ளும்படி இருக்கும்;
கடினமாகவும் போராட வேண்டியிருக்கும்.
– தோழர் அம்பேத்கர்
ஒவ்வொரு தனி நபரின் மனப்பான்மையும்
ஜனநாயக ரீதியில் இருந்தால்தான்,
அதாவது ஒவ்வொருவரும் மற்றவர்களில்
ஒவ்வொருவரையும் தனக்குச் சமமாக நடத்தி,
தான் உரிமை கொண்டாடும் அதே சுதந்திரத்தை
மற்றவர்களுக்கும் கொடுக்கத் தயாராக இருந்தால்தான்
மக்களுக்காக நடைபெறும் அரசாக அது இருக்க முடியும்.
இந்த ஜனநாயக மனப்பான்மை,
தனி நபர் ஜனநாயக சமூகத்தில்
கலந்து பழகுவதன் விளைவாக உருவாவது.
எனவே ஜனநாயக அரசு வேண்டுமென்றால்,
முதலில் ஜனநாயக சமூகம் வேண்டும்.
– தோழர் அம்பேத்கர்
(ஆங்கில நூல் தொகுப்பு: 4, பக்கம் : 282)
Comments
Post a Comment