ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்,
அப்படித்தான் நமது அரசாங்கமும்
தமிழ் நாடு மக்கள் அறிவில்லாதவர்கள்
என்று நினைத்து விட்டார்கள் போலும்,
இலவசங்கள் மூலம் மக்கள் கண்ணை மறைத்து
வீதிக்கு வீதி மது கடையை
திறந்து வைதிர்க்கும் தமிழக அரசாங்கமே !
தினசரி போதையினால் செத்து கொண்டிர்க்கும்
அப்பாவி ஆண்கள் உன் கண்களுக்கு தெரியவில்லை ,
போதையினால் நடக்கும் விபத்துக்கள்
உன் கண்ணுக்கு தெரிய வில்லை ,
அப்பாவி பெண்கள் கற்பழிக்க பட
மது தான் காரணம் என்பதை மறந்தாய??
பெண்ணின் வலி பெண்களுக்கு தெரியுமாம்
ஆனால் உனக்கு அதும் புரியவில்லை
மது விலக்குக்காக தனியாக போராடும்
நந்தினி என்ற பெண்ணை அலைய விட்டாய்
போலீசாரை விட்டு விரட்டினாய்
இப்போது வெட்கமே இல்லாமல்
புத்தாண்டு மது கடை முதலீடு 230 கோடி
என்று கணக்கு போடுக்கிறாய் ,
சாராய கடை மூலம் கோடி கணக்கில்
சம்பாதிக்கும் தமிழக அரசே !!
அரசாங்கம் என்பது மக்களுக்காக
செயல்படா விட்டாலும்
மக்கள் கெடுதலுக்காக செயல் பட கூடாது..!
மது கடைகளை உடனே மூடு
இலையேல்
தமிழகத்தில் மீண்டும் ஒரு மாணவர்கள்
புரட்சி வெடிக்கும் !!
Comments
Post a Comment