கல்யாண வாழ்த்து-kalyaana vaalthu

பூவினால் காய்கள் தோன்றும்!

புலவனால் கவிதை தோன்றும்!


நாவினால் சொற்கள் தோன்றும்!


காதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம்


இனிதாய் கூவுங்கள் மணமக்களை வாழ்த்தியிங்கு

கல கல பேச்சு உண்டு!


களங்கமில்லா தோற்றமுண்டு! 

தன்
பல கலைத் திறனினாலே -மணமக்கள்



நலிவடையா விளை நிலம் போலானார்!

கன்னத்தில் பொலிவு தோன்றும்


கரும்பெனச் சிரிக்கும்போது! -எல்லோரது
எண்ணங்களிலும் இனிமை தோன்றும்


வாழ்த்துவோம் மணமக்களை -இன்னுமோர்
நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று…

Comments