காதல் கணவனே
காலையில் எழுந்ததும்
கடமைக்கு உனை அனுப்பிட
கண்மணி நான் இங்கே
கலகலப்பாய் இருக்கிறேன்
குழந்தையை போன்ற உன்னை
தாயைப் போல் பார்த்து
தயவாக அணைத்து
உன் சேவகம் செய்வதில்
உள்ளார்ந்த ஆனந்தம்
தலைவாரி உடைபோட்டு
தாயாக நான் மாறி
உனை சேயாக்க ஆசையிங்கே
தாயுமானவனே உன்னால்
தாயுமாகிவிட்டேன்!
குறும்பாக நீ பேசி
குளுகுளு கதை சொல்லி
செல்லமாய் எனை தீண்டி
சில்மிசம் பண்ணுகையில்
சின்னதாய் ஊடலிங்கே
செல்லமாய் பாக்கிறது
காதல் நாயகனே நீ
கட்டியணைத்தென்னை
காதல் செய்கையிலே
சின்னதாய் நாணமும்
சிலிர்க்கின்ற மேனியுமாய்
சரணடைச்து போகின்றேன்
செல்லமாய் சண்டையிட்டு
சீண்டலாய் நீ பேசுகையில்
கள்ளக் கோவமாய்
கண்ணாளனே உன்னை
மெல்ல கலாய்த்திங்கு
மேனி தழுவுகிறேன்
காலைப் பொழுதிலே
நம் குறும்புச் சண்டையும்
உன் முத்தக் கெஞ்சல்களும்
கொஞ்சல்களாய் என்னை
கோவிக்க வைக்கிறது
சீண்டலாய் என்னை நீ
திட்டுகின்ற போதெல்லாம்
பதிலுக்குத் திட்டிட
வார்த்தைகள் தேடுகிறேன்
பகலிரவாய் நான் இங்கே
காதல் நாயகனே உன்
இதயமாளிகையின்
இனிய வாசல்
எனக்காக மட்டுமே
இறுதிவரைக்கும் வேண்டுமிங்கே
உன் குறும்புக் கதைகளை
உள்ளுக்குள் ரசித்தால்
மாயக் கோவத்தில்
உன்னை மெல்லச் சீண்டி
தினமும் ரசிக்கிறேன்
நாணத்தில் நான் வளைய
நயமாக நீ அணைக்க
மெழுகாய் உருகிறது
என் மெல்லிய மேனி இங்கே
உன் இதய கூட்டுக்குள்
இதமாக வாழ்ந்திட……………
husand poem in tamil, tamil husband poem, kanavan kavithai, new husband kind poem in tamil, kanavan kavithaigal
Comments
Post a Comment