Natpu kavithai-ஆண் பெண் நட்பு

தயக்கத்தோடு ஆரம்பிக்கும் 
முதல் உரையாடல். 

பயத்தோடு பகிர்ந்து கொள்ளப்படும் 
அலைபேசி எண்கள். 

அவள் தவறாக எண்ணிவிடுவாளோ?
என்று யோசித்து,யோசித்து பேசும் தருணங்கள். 

காதல்,கீதல் என உளறுவானோ?
என்று குழப்பத்தோடு பேசும் ஆரம்பக்காலங்கள். 

புரிதல் தொடங்கும் நேரத்தில் 
தானாக மலர ஆரம்பிக்கும் நட்பு மலர். 

புரிந்து கொண்ட பின், 

ஆண்-பெண் வித்தியாசத்தை 
காணாமல் ஆக்கும் நட்பின் ஆழம். 

தோல்விகண்டு துவலுகையில் 

 
புதுத்தெம்பூட்டி,
அடுத்த முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள் 
அவனை அவன் தோழி. 

ஆடவர் நால்வர் முன் தைரியத்தோடும்,
பெண்மை மாறாமலும், 
வாழ வழிகாட்டுவான் அவளுக்கு அவள் தோழன். 

முடிவில்லா முடிவில்-நட்பு வளர்ந்து நிற்கும்? 
புரிந்து இருக்கமாட்டார்கள் என்னை, 
என் தோழியை/நண்பனை விட 
வேறு யாரும் நன்றாக என்னும் ரீதியில்…! 

வளரட்டும் இதுபோல் 
ஆரோக்கியமாக ஆண்-பெண் நட்பு.

வாழு வாழ விடு !!!

Comments