மனிதனுக்கு நல்ல பகுத்தறிவு இருந்தும்
அதனுடைய பலனை,
அதற்குரிய சக்திகளை மனிதன்
இன்னும் அடையவில்லை.
இவற்றை அடைய முடியாமைக்குக் காரணம்
அறிவின், பேதமல்ல.
பின் என்னவென்றால்
அறிவைத் தடை செய்யும்படியான வாய்ப்புகள்தான்.
அதில் முதலாவது கடவுள்தான்.
கடவுள், கடவுளைச் சார்ந்து எழுதப்பட்ட கதைகள்,
கடவுள், மதம் இரண்டையும்
சம்பந்தப்படுத்தி எழுதப்பட்ட ஆதாரங்கள்
இவை எல்லாம் சேர்ந்து
நாம் பகுத்தறிவைப் பயன்படுத்தி
அதனால் ஏற்படும் பயன், சக்திகளை அடைய முடியாமல் தடை செய்துவிட்டன.
– தோழர் ஈ.வெ.ரா,
(‘விடுதலை’, 07.06.1967)
Comments
Post a Comment