உயிர் தோழி ப்ரியா-Priya|natpu kavithai

நட்பை கோர்த்து கவலைகளை புதைத்து 
உனக்காய் ஓர் கவிதை ,
நம் உயிர் பிரிந்தாலும் 
நம் நட்பை போற்றி கொண்டே !!!!!!!

முகம் பார்த்து பழகியது இல்லை 
முக நூலில் தான் பழகினோம் !!

ஊர் ஊராய் சுற்றியதும் இல்லை, ஆனாலும் 
ஊற்று நீராய் பெருகியது நம் நட்பு 

ஆயிரம் சுமைகள் உனக்குண்டு 
அதனையும் மறைத்து சிறித்தவள் நீ 

தன்னம்பிக்கையின் தலைநகரம் நீ 
தன்னலமற்ற சேவகி நீ 

அன்பின் சிகரம் நீ 
ஆதரவற்றோருக்கு கடவுள் நீ 

பிறர் இன்பத்தில் தன் இன்பம் கண்டவள்  நீ, ஆனாலும் 
புரியா புதிராய் உன் வாழ்க்கை 


உயிரற்ற கடவுள் சோகங்களை மட்டும் தந்து 

உன்னை சோதிக்க பார்கிறான் 

போலி அன்பினால் 
புதைந்து போன உன் இன்பங்கள் 

உண்மையான நட்பினால் ஒரு நாள் 
உன் பெயரை சொல்லி  நிற்கும் 

உன்னை போல் ஒரு பெண்ணில்லை 
உன்னை விட சிறந்தவள் இந்த உலகில் இல்லை 

வாழ்கையின் விளிம்பில் போராடி கொண்டிக்கும் நீ 
நிச்சயம் வெற்றி பெறுவாய் !!!


என்றும் நட்புடன்

உன் தோழன்—>> அரவிந்த் யோகன்

இந்த கவிதையை என் தோழி ப்ரியாவிற்காக,
இந்த வலை பூவில் சமர்பிக்கிறேன்…!!!

Comments