புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-puthaandu vaalthu

புத்தாண்டு – இது

 புவியின் வளற்சியில்

இன்னும் ஓர் ஆண்டு.

தினம் தினம் வரும்

நாள்போல் இல்லாமல்,

இனிவரும் நாளெல்லம்

இன்பமாய் இருக்கட்டும். 

திக்கி திக்கி பேசும்

குழந்தை மொழிபோல,

தித்திப்பாய் இருக்கட்டும்

திகட்டாமல் இருக்கட்டும்.

இலங்கையில் நடந்தாற்போல்

இனியொரு கொடுமை

இந்தாண்டுமுதல் வேண்டாம்.

யாரோ,

கோடிகோடியாச் சேர்த்த பணமெல்லம்

தெருக்கோடியில் வாழும்

ரங்கனுக்கும் போய்ச்சேரட்டும்

சீரியல் பார்த்து பார்த்து

அழுதுசிவந்த முகம்,

இன்று ஒருநாளாவது சிரிக்கட்டும்

சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில்

முகம் பார்த்த நிலை மாறி – வழுக்கும்

கண்ணாடி சாலையில் முகம்பார்க்கும்

நிலை வரட்டும்.

சகலரும்,

சண்டை, சச்சரவு களைந்து,

மதங்களையெல்லம் மறந்து,

மனித உணர்வோடு

மகிழ்வாய் இருக்கட்டும்.

தரணி வாழ் அனைவரும்

என் தமிழ்ப் புத்தாண்டையும்

இதுபோல் கொண்டாடும்

நாள்வரட்டும்.

எதிர்காலம் அது உங்கள்

எண்ணம்போல் அமைய எனது

“புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்”

Comments