காதல் மொழி-tamil kathal

காதலன் முகம் காண

காத்திருந்த நொடிகள்
எத்தனையோ ஏக்கங்கள்
ஏந்தலையாள் மனதினுள்
காதலியின் வரவை எண்ணி
நெஞ்சோடு கலந்த
நெகிழ்வான கற்பனைகளை
ஒவ்வொன்றாய் எண்ணியபடி
காத்திருந்த காதலரின்
கண்கள் பேசிடும்
காதல் மொழிகளில்
கரைந்திடும் கவலைகள்
எத்தனையோ நாட்களாய்
ஏற்றி வைத்த காதல் தீபம்
காதலர் மூச்சுப்பட்டு
களிப்புடன் மிளிர்கிறது
மெல்ல நடை பயின்று
மென்மையான உள்ளங்களை
மலர்தூவி வெளிக்கொணர
மங்கையிவள் சிலிக்கிறாள்
உள்ளத்து உணர்வுகள்
கண்களில் பேசிட
உயிருள்ள காதலுடன்

 
ஓர் ஜோடி உயிர்கள் இங்கே
காதலை பகிர்ந்து தம்
கனவுகளை நனவாக்க
காதலர் இங்கே தம்
காதல் மனங்களுடன்
நாணங்கள் பொங்கிட
கானங்கள் இசைத்திட
காதலர் கைகோர்க்க
காத்திருக்கும் நிமிடம் இது
மணிக்கணக்காய் கதை பேசி
மகிழ்ந்திருக்கும் உள்ளங்கள்
விடைபெறும் நொடியிலும்
காதல் குறையவில்லை
கையசைத்து விடை கூற
காதலர்க்கு தேவையில்லை
கதை பேசும் கண்களே
ஆயிரம் கதை கூறும்
பார்வைகளின் பரிமாற்றம்
இதழோர புன்னகை
இதமான நினைவுகள்
என்றென்றும் காதலுக்கு
விட்டு விட்டுத் துடித்திடும்
இதயத்தின் இனிமையும்
வினாக்களை எழுப்பிடும்
விழிகளின் கேள்வியும்
பதில் கூற பார்த்து நிற்கும்
பார்வைகளின் ஏக்கமும்
காதல் மனங்களிற்கு
சொர்க்கத்தின் வாசலே
தம்மையே அறியாத
காதல் அழகொன்று
புதிதாக தவழ்கிறது
காதல் மனங்களிலே
பார்க்கும் பொருளிலெல்லாம்
பொதிந்திருக்கும் காதலுடன்
பாரினிலே காதலர்கள்
பரிவுடன் காதல் செய்க

Comments