சமுதாயம் எங்கும் சாதி மத சாரல்கள் வீச
மூடநம்பிக்கைகள் குவிந்து கிடக்க
பிஞ்சு குழந்தையிடம் கூட மதத்தையும் சாதியும்
விதைக்கும் சமுதாயம் இது
பாரதியையும், வள்ளுவனையும் மறந்து
நேதாஜியையும் பெரியாரையும் இகழ்ந்து
காந்தியை தலைக்கு மேல்
தூக்கி வைத்து கொண்டாடிய
சமுதாயம் இது !!
குழந்தைக்கு பூசாரி சூடு போட்டால்
படிப்பு வருமாம்
கழுதைக்கு திருமணம் செய்தால்
மழை வருமாம்
இன்னும் இதே போல் பல நிகழ்வுகளை
ரசித்து கொண்டிர்கிறது நமது சமுதாயம் !!
கடந்த காலத்தை மறந்து, அந்த
அனுபவத்தை மட்டும் எடுத்து
நாம் ஒவ்வொருவரும் சுயசிந்தனையோடு
திருந்த நினைக்கும் கணம்
நமது சமுதாயத்தில் ஒளி வீசும் !!
நன்றி !!
Comments
Post a Comment