சின்னப் பையன் அப்பாவிடம் கேட்டான்.”
அப்பா…அரசியல் என்றால் என்ன…?”
அப்பா யோசித்துவிட்டுச் சொன்னார்.
”நல்லது. உனக்கு நான் அதனை இப்படி விளங்கப்படுத்துகிறேன்.
நமது இந்தக் குடும்பத்தில் அதிகாரமுள்ளவன் நான்.
ஆகவே நான் அரசாங்கம்.
எனக்கு ஆலோசனை சொல்பவள் அம்மா.
ஆகவே அவள் அமைச்சர்.
வேலைக்காரி நமது தயவில் வாழ்கிறாள்.
எனவே அவள் மக்கள். நீ அடிக்கடி கேள்வி கேட்பவன்.
ஆகவே நீ ஊடகம்.
உனது சின்னத் தம்பிப் பாப்பாதான் நாட்டின் எதிர்காலம்.”
பையனுக்குக் கொஞ்சம் புரிந்தது, மீதி புரியவில்லை.
யோசித்துக் கொண்டே அவன் படுக்கைக்குப் போய் விட்டான்.
சிறிது நேரத்திற்குள் தம்பி அழும் சத்தம் கேட்டது.
பையன் எழுந்து சென்று பார்த்தான்.
தம்பி சிறுநீர் கழித்துவிட்டு,
ஈரத்தில் படுக்க முடியாமல் அழுது கொண்டிருந்தான்.
அவனுக்கு உடை மாற்ற வேண்டும்.
அம்மாவின் அறைக்குள் போனான் சிறுவன்.
அம்மா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.
வேலைக்காரியின் அறைக்குள் போகுமுன்,
சாவித் துவாரத்தால் பார்த்தான்.
அங்கே வேலைக்காரியை அப்பா
அடித்து துன்புறுத்தி கொண்டிருந்தார்.
பையன் பேசாமல் வந்து படுத்துக் கொண்டான்.
காலையில் எழுந்ததும் அப்பாவிடம் சொன்னான்.
”அப்பா..அரசியல் என்பதன் அர்த்தம்
எனக்கு நன்றாகவே புரிந்து விட்டது…!”
”கெட்டிக்காரன்…சரி, சொல் பார்க்கலாம்..” என்றார் அப்பா.
மகன் சொன்னான்:
”அரசாங்கத்தால் மக்கள் கொடுமைக்குள்ளாகும் போது
அமைச்சர்கள் குறட்டை விட்டுத் தூங்குவார்கள்.
ஊடகங்கள் எதுவும் பேசாமல் மௌனமாகிவிடும்.
நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிச்
சிந்திக்க யாருமே இருக்க மாட்டார்கள்!”
எந்த நாட்டுக்கு இது பொருந்தும் என்பதை
நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!
Comments
Post a Comment