நண்பா, உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன்..
வாழ்கையில் உச்சத்தை தொடவேண்டுமா?
தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டுமா?
பணம் உன் காலடியில் கொட்ட வேண்டுமா?
நீ செய்ய வேண்டியது ஒன்று தான்…
எண்ணங்களை மாற்று! எண்ணங்களை மாற்று!
எதிர்காலம் தானாக உருவாகாது,
உன் எண்ணத்தால் உருவாக்கு…
நீ நினைத்தால்….
கடல் உன் வீட்டு நீச்சல் குளம்,
மலை உனக்கு குடை,
நிலம் பட்டு மெத்தை.
உறுதியான எண்ணமே உயர்வான பரிசு
உன் வாழ்வுக்கு அது மிக பெரிசு
உன் உள்ளமே தங்கசுரங்கம்
உள்ளே பார் கிடைக்கும் அமுத அரங்கம்..
கடவுள் என்றால் என்ன?
கட – உள், உன் உள்ளத்தை கடந்தால்
உலகம் உனக்கு அற்பம்.
செதுக்கு நீ உன்னையே ஒரு சிற்பம்!
ஆழ்மனதிற்க்கு இட்டு விடு
ஆணை அது உன் வாழ்க்கையை
தாலாட்டும் – அற்புத வீணை…
கேட்டதெல்லாம் கொடுக்கும்
கற்பகசேனை.
உன்னை நம்பு, உன்னை மட்டுமே நம்பு,
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் உன்னை மட்டுமே நம்பு,
தங்கம் ஆகிடுமே உன் கையின் செம்பு….
கரும்பாய் இனித்திடுமே கசப்பான வேம்பு!
நன்றி சொல் ஆண்டவனுக்கும்,
நன்றி சொல் பெற்றவருக்கும்…
நன்றி சொல் அனைத்திற்கும்…
சொல்ல சொல்ல இனித்திடும் வாழ்க்கை
மெல்ல மெல்ல நிறைவேறிடும் வேட்கை!
அன்பால் நீ வெல்லு அகிலத்தை…
உன்பால் சாய்த்திடுமே அது சிரத்தை!
மேல் சொன்ன அனைத்தையும் நீ கற்றுக்கொள்ளு…
மேதினியை ஒரு நொடியில் வெற்றி கொள்ளு!
Comments
Post a Comment