மட்டும் தான் உயிர் முக்கியமா ?
அமெரிக்க தூதர் கைது செய்ததற்கு
அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க படுகிறது ..!!!
அதுவும் ஒரு சராசரி குடும்ப பெண்ணை
அமெரிக்காவுக்குஅழைத்து சென்று
நியாயமான சம்பளம் கொடுக்காமல் .
அவரை ஒரு அடிமை போல நடத்தியிருக்கிறார் !
அந்த பெண்ணின் அப்பாவி கணவரை
போலிசை வைத்து வழக்கு பதிவு செய்து
சிறை பிடித்திருக்கிறார்!
அப்படி பட்ட பெண்ணுக்கு பல தலைவர்கள் ,
அரசியல்வாதிகள்ஆதரவு அளிப்போதுதோடு
அமெரிக்காவிற்குஆளாளிற்கு
கண்டனம் தெரிவிகிறார்கள்!!
என்னய்யா நியாயம் இது ?
இலங்கை கடற்படை
நம் தமிழக மீனவர்களை அன்றாடம் சுடுகிறார்கள் ..
அவர்களுக்கு குரல் குடுக்க ஏன் தயங்குகிறீர்கள்?
ஏன் படிச்சவனுகும் ,பணக்காரனுக்கு
மட்டும் தான் உயிர் முக்கியமா ?
மீன் பிடிக்க போன நாலு பெற காணோம் !
3 நாளுக்கு பிறகுதான் கண்டுபிடிச்சாங்க !!
ஒரு ஆட்டோ டிரைவரை
விசாரணை என்ற பெயரில் கூட்டி சென்றார்கள் ..
இன்று அவர் உயிரோடு இல்லை !
அன்றாடம் மீனவர்கள் சிறை பிடிக்க படுகிறார்கள்,
சுட்டு கொள்ளகூட படுகிறார்கள்!
இது நம் நாட்டின் செய்திதாலில்
அன்றாடம் பார்த்து பழகிய செய்திகள்!
படிக்காத பாமர மக்களின் வாழ்வில்
நாடாகும் அன்றாடம் நிகழ்வுகள் ..
இத பத்தி பேச இங்க எந்த தலைவர்களும்
தயாராகவில்லை !
யோசிச்சு பார்த்தா கோவம் தான் வருது !!
அரசியல் வாதிகள் ,
தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும்
ஒட்டு வாங்கும் கண்ணோட்டம்
என்று மாறுமோ அன்றுதான் இதெல்லாம் மாறும் !!!
அரவிந்த் கேஜ்ரிவால் சாதனை ஒன்றும்
செய்யவில்லை ..
ஒரு முதலமைச்சர் செய்ய வேண்டிய
சராசரி கடமையை தான் செய்கிறார் !!
அதை நாட்டு மக்கள் இப்படி மிரட்சியுடன்
பார்த்து புகழ்கிறார்கள் என்றால்
நமக்கும் ,மக்களாட்சி என்னும் உண்மைக்கும்
எவ்வளவு தூரமான
இடைவெளியில் இருகின்றது என்று பாருங்கள்.
Comments
Post a Comment