பேனா கொடுத்தாள்
அவள் போவதை எழுதச்சொல்லி
போனபின்பும் இன்னும்
எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன் மனதோடு !
அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறேன்
காற்றோடு !
என்றாவது நீ வருவாய்
என்ற நினைப்போடு !
காற்றில் வரைந்த ஓவியமாய்
என் காதல் !
கருகலைப்பு செய்து விட்டாயோ
நம் காதலை !
கலங்கி நிற்கிறேன் கடற்கரையில் !
ஏற்றுக்கொள்ளுமா கடலாவது என்னை காதலோடு !
Comments
Post a Comment