Annaiyar thina kavithaigal 2015
ஓர் ஓசையில் இத்தனை அர்த்தங்களா. . .
அம்மா. . .
குழந்தையின் மழலையில் குழல் தரும் ஓசை . .
அம்மா. . .
பால் தரும் பசுவும் பகிர்ந்திடும் ஓசை . . .
அம்மா. . .
பசித்திடும் ஏழையின் பாவ மொழி ஓசை. . . .
அம்மா. .
.
அடிக்கையில் அனைவரும் அலறிடும் ஓசை. . . .
அம்மா. . .
பருவத்தின் ஸ்பரிசத்தில் பரவசத்தின் வார்த்தை. . .
அம்மா. . .
முதுமையின் வலியிலும் முனகிடும் வார்த்தை. . .
அம்மா. . .
சொன்னாலும் முடியாது சொல்லாமல் தீராது. . .
அம்மா. . .
இருக்குதோ தமிழில் இதை விட சிறந்த வார்த்தை. . .
அம்மா. . .
ஆதலால் அதுதானே அழகு தமிழ் முதல் ஓசை. . . ! ! !
அம்மா!!!!!!!!!!
அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !!!
Tags:
அன்னையர் தின கவிதைகள், amma kavithai in tamil font, annaiyar thina kavithaigal,
annaiyar thina vaalthu kavithaikal in tamil font, mothers day poem in tamil font 2015
Comments
Post a Comment