சிகரமேர காத்திருக்கும்
சீர்மிகு மனிதா
சீர்மிகு மனிதா
உன்சிந்தையிலே பதிந்துவை
சிரமங்கள் ஆயிரங்கள் வந்தபோதும்
நொந்துபோகும் மனம்வேண்டாம் தெம்பாயிரு ….
வாழ்க்கையென்னும் பந்தயத்தில்
ஒட்டமென்னும் முந்துதலில்
வீழ்தலும் எழுதலும் தோல்வியில்லை
வீழ்ந்து கிடப்பதுதான் தோல்வி ……….
காற்றில்வரும் வாசனையில்
நறுமணமும் நாற்றமும்தான் சேர்ந்திருக்கும்
அதற்காக நுகர்வதை நிறுத்தமுடியுமா ?
அறுந்துபோகும் பட்டங்கள்
ஆயிரம் இருக்கட்டும்
உயர்வதில் உன் கண்ணை வை
உயர்ந்த மரத்தின் உயரத்தை விட
வேரின் ஆழம்தான் முக்கியம் ……..
சேற்றில் விழுந்த விதைகூட
செந்தாமரையை முளைக்கும்போது
உனக்கென்னையா ஓயாத சோம்பல் ,
ஓய்வை குறைத்துப்பார் உயர்வு விரைவில் ..
Comments
Post a Comment