தமிழனின் மகத்துவம்-tamilan kavithai

பூக்களில் படும் காற்றுக்கு தெரியாது
அன்பின் வாசம்…!

புண்ணிய பூமியில் வாழும் யாருக்கும் புரியாது
தமிழனின் நேசம்…!

கடல் கடந்து வாழ்ந்தாலும் குறையாது
இவன் அன்பு வெள்ளம்…!

ஆதரவற்றோர்க்கு அடைக்கலம் தான்
தமிழனின் உள்ளம்…!

சமரசமாக வாழும் இவன்
சகோதரத்துவம்…!

ஒருமைபாட்டுணர்வே
தமிழனின் மகத்துவம்…!

அன்பு என்றால் தலைவணங்குவோம்
 தரம் கெடமாட்டோம்…!

அதிகாரம் ஆண்டால் அடிபணியவைப்போம்
வீரத்தை விடமாட்டோம்…!

அனைவரையும் கவரும் தமிழனின் ஒற்றுமை…!

ஆண்டவனிடம் என்றுமே இல்லை
தமிழனின் வேற்றுமை…!

சாதிகளை ஒழிப்பது தான் எங்களின் பேச்சு…!
தமிழனின் நல்லுணர்வே இந்தியாவின் மூச்சு…!

Comments