காதல் தோல்வி-thannambikai kavithai

பெண்ணே…
உயிராக உன்னை நினைத்து…

அன்பாக பேசும் என்னிடத்தில்…
கோபம் கொள்கிறாய் காரணமின்றி…!

நான் பேசும் அன்பான வார்த்தைகளுக்கு…
பதில் தர மறுக்கிறாய்… !

பிடிக்கவில்லையா என்றால் ஆமாம் என்கிறாய்…
உன்னிடம் என் காதலை சொன்ன போதே…
நீ சொல்லி இருக்கலாம்… !

காலங்கள் கடந்து இன்று சொல்கிராயடி…
உனக்காக நான் காத்திருந்த…
மணித்துளிகள் பல நினைத்து பார்கிறேனடி…

மீண்டும் கிடைக்குமா நான் தவற விட்ட…
பொக்கிஷமான மணித்துளிகள்…

இனி என்னை கடக்கும் ஒவ்வொரு வினாடியும்…


முன்னேருவேனடி என் வாழ்வின் வெற்றிக்காக…

அழகிய வாழ்வினை வெல்வெனடி…
ஓர் நாள் உலகம் இல்லையெனும்…

என் சமுகம் என்னை திரும்பி பார்க்குமடி…
பெண்ணே நீயும் அப்போது திரும்பி பார்பாயடி என்னை…

அன்று என்னில் எதுவும் இருக்காது…
உன் நினைவுகள் எதுவுமே…

நீ என்னை வெறுத்த இந்த நிமிஷம்…
நான் மீண்டும் பிறந்தேனடி…

புதிய பூமியில் புதிய வானமாய்…
எப்படி தொடுவேனடி வாழ்வை…

பறிபேனடி பல வெற்றி கனிகளை…

என் வாழ்க்கையை உணர்த்திய உனக்கு…
நன்றி கோடிகள் பெண்ணே…

தொடரும் என் வாழ்வு வசந்தமாய்…..!!!

Comments