சுள்ளி பொறுக்க காட்டிற்குள் சென்று
வழி தெரியாமல் போய்விட்ட பெண்களை பார்த்தால்
“நீ ஏம்மா இங்க எல்லாம் வர?
பொலிசுகாரனுங்க கண்ணுல பட்டுட போற…
ஏதாவது ஆடு வளத்து பொழச்சிக்கோ”
என்று கையில் இருக்கும் காசை கொடுத்து
காட்டு எல்லை வரை வந்து விட்டு விட்டு
போவாராம் வீரப்பன்..
வீரப்பன் அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்:-
1. காவிரிப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து முடிவுகூறவேண்டும்.
2.வாச்சாத்தி, சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில்
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆகியோருக்குநஷ்டஈடு
தரவேண்டும்.
3. தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியைக்
கட்டாயமாக்க வேண்டும். அதற்கானசட்டம் இயற்ற வேண்டும்..
4. பெங்களூரில் மூடப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத்
திறக்க வேண்டும்.
5.தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களை
விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு உறுதியளித்தபடி
நிவாரணம் வழங்க வேண்டும்.
6.தமிழக சிறைகளில் உள்ள தமிழ் தேசிய விடுதலைப் படை,
தமிழ் விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த
5 பேரை தமிழக அரசு உடனே விடுவிக்க
நடவடிக்கை எடுக்கவேண்டும்…
துரோகங்களாலும் சூழ்ச்சிகளாலும்மட்டுமே
எங்களை வீழ்த்தினீர்கள் என்று வரலாறு காட்டுகிறது.
மாவீரன் வீரப்பனாருக்கு வீர வணக்கம்.
Comments
Post a Comment