இந்தியா-விழிப்புணர்வு|Aravinth yohan

இது உணர்வால் உணர்ந்த உண்மை கவிதை:

எத்தனை கடவுள் இருந்து என்ன பயன் ??

பிறர்க்கு உதவி செய்து என்ன பயன் ??

கொன்று குவிக்க ஒரு கூட்டம்

எதிர்த்து நிக்க ஏங்கும் ஒரு கூட்டம்

ஆதரவு காட்ட யாருமில்லை,

வயதாகி போனதோ கடவுளுக்கு

வாசனையற்ற மனிதர்களை காப்பதற்கு ,

பிழைப்பற்று நடை பாதையில் ஒரு கூட்டம்

நடை பிணமாய் பணத்தை சுமந்து கொண்டு ஒரு கூட்டம்

சொல்கிறார்கள் ,

வளரும் நாடு இந்தியாவாம்

வாழ்ந்தது யார் என்று தெரியாமல் ,

 மதத்தை வளர்க்க போராடுகிறது ஒரு கூட்டம்

மதத்தால் சண்டையிட்டு மடிகிறது ஒரு கூட்டம்

சொல்லி திரிவார்கள் ,

கிரானைட் மலையை காணவில்லை  என்று ,

சொல்ல மறுப்பார்கள் ,

மறு வாரமே அந்த வழக்கும்  காணமல் போனதை..,

நீதியை, நிதி கொடுத்து வாங்க ஒரு கூட்டம்

நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாய்தா வாய்தா என்று

வாழ்கையை தொலைத்த பல கூட்டம் ,

சொல்கிறார்கள்,

இந்தியா சுதந்திர நாடாம்

வெளிநாட்டு தொழிற்சாலைகள் இந்தியாவை

சுரண்டி கொண்டிருப்பதை அறியாமல் ,

பத்தாம் வகுப்பு படித்தவன் போலீஸ் காரணாம்

மக்களின் நிலை அறிந்தவன்

கூலி தொழிலாளியாம் ,,,

பட்டதாரிகள் அடிமை தொழிலாளியாம்

பேச தெரிந்தவன் அரசியல்வாதியாம் …,

என்று மாறும் இத்தகைய நிலைமைகள் ??

என்று பிறக்கும் புதியதோர் இந்தியா ??

புத்தகத்தை மட்டும் படித்து சாதி, மத , போதைக்கு

அடிமை ஆகிர்க்கும் பெரும்பாலான இளைஞர்களே !!

சற்று சிந்தியுங்கள் ,

இந்தியா  வல்லரசு ஆகாவிட்டாலும் ,

நல்லரசு ஆகும் என்பது உறுதி …!!!

-தொடரும்

நண்பர்களே இந்த பதிவின் முழுமையான
பொருளை உணர்ந்தவர்கள் மட்டும் உங்கள்
கருத்தை தெரிவிக்கவும் ,,,!!

நன்றி !!

Comments