உயிர் பிரியும் நேரத்தில் கண்ணீரால் கணவனுக்காக வடிக்க பட்ட கவிதை

Uyir piriyum nerathil kanavanukkaga 

padaikka patta UNMAI kanneer kavithai

காதல் கணவனே ,

உடைந்த படகில்

துடுப்பற்ற என் வாழ்க்கை ,

துடுப்பாய் வந்தீர்கள் நீங்கள் .

கடல் போல் நாம் இணைந்தோம் ,

படகு உடைந்து இருப்பதை அறியாமல் ,

வாழ்க்கை பயணத்தை தொடங்கிய

சில நாளிலே

நீரோடு அடித்து  பட்டேன் ,

திரும்ப வரமுடியாத பாதையில்.!

வருந்தாதே மனமே ,

உங்கள் கண்கள் கலங்குவதை பார்க்க


 சக்தி இல்லாமல் ,

உங்களிடம் உண்மையை சொல்ல மறுத்தேன் …..!!

நமது குழந்தையாக நான் பிறப்பேன் ,

உங்கள் கண்ணீர் துடைக்க ..!

தனியாக தவிக்க விட்டேன் என்று

வருந்தாதே மனமே ,

உன் சாதனைகள் தொடர்ந்திட ,

நமது குழந்தை சரித்திரம் படைக்க

நீங்கள் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் ..!!

உங்கள் கரம் பிடித்த நாட்களே ,

என் வாழ்வின் சிறந்த தருணங்கள் …!

அனைத்திலும் வெற்றி பெற்றேன்,

காதலில்  கூட ,

ஆனால் தோற்று விட்டேன்

தாயாக குழந்தை வளர்ப்பதில் ..!!

கள்ளங்கபடமற்ற மனதோடு ,

எனக்கு தோழனாக, தந்தையாக விளங்கிய

என் காதல் கணவனே

நீ சிந்தும் கடைசி துளி கண்ணீர்

இதுவாக இருக்கட்டும் ,

உன் கண்ணீர் துளிகள் , விதையாக இருக்கும்

நம் குழந்தைக்கு  உரமாக மாறி,

அவன் /அவள்  வாழ்கையில் சிறக்க வழி செய்யட்டும் !!

இப்படிக்கு ,

பிரியும் வேளையில் பிரியா மனதுடன்

உங்கள் காதல் மனைவி !!!

பிரியா 🙁

நண்பர்களே ,
இது என் உயிர் தோழியின் வேண்டுடுதலுகினங்க
என்னால்
கண்ணீர் மல்க எழுத பட்ட முதல் கவிதை 🙁

தயவு செய்து
இந்த கவிதையை மட்டும் SHARE செய்யாதீர்கள் !!

Comments