சே குவேரா காதலி-Kaathal Enbathu??

‘சே குவேரா’ காதலிக்க ஆரம்பித்தார்.

அதை தெரிந்து கொண்ட அவருடைய
 பத்திரிகை துறை நண்பர், யார் அந்த பெண்?
அவரும் துப்பாக்கிகளோடு இருக்கிறாரே.
அவரும் விடுதலை போராளி என்று கேள்விப்பட்டேன்.
உங்களுக்குள் எப்படி காதல் வந்தது? என்கிறார்.

“எங்கள் நேசத்தை எங்களின் கண்களில்
கண்டு கொண்டோம்.
எங்களின் மக்கள் சேவைக்கான தேவையை
இதயங்களில் கண்டு கொண்டோம்”
என்று சே குவேரா கூறுகிறார்.

அந்த நேரத்தில் ‘கொரிலா’ போரில் சே ஈடுபடுகிறார்.
ஏன் இந்த ஆபத்தான வேலை.
காதலியோடு சந்தோஷமாய் வாழக் கூடாதா?
என்கிறார்கள் சில நண்பர்கள்.

சே, “என் காதல் முக்கியமானதுதான்.
அதைவிட மக்கள் உரிமைக்காக போராடுவது
மிக முக்கியமானதாக இருக்கிறது” என்கிறார்.

சில வருடங்களுக்கு பிறகு


காதலித்த பெண்ணை திருமணம் செய்கிறார்

சே. அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தபோது,
அதே நண்பர் , “இனி குடும்ப வாழ்க்கைக்கு மட்டுமே
முன்னுரிமையா? என்று சிரித்துக் கொண்டே கேட்க

சே சொல்கிறார்: “எனது குடும்ப வாழ்க்கை
சமூகத்திற்காக நான் செய்ய வேண்டிய கடமையில்
இருந்து என்னை விலக்கி விடாது.”

சே காதலிக்கும் முன்பும்
போராளியாக இருந்தார்.
காலித்துக் கொண்டிருந்த போதும்
போராளியாக இருந்தார்.
குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதும்
போராளியாய் இருந்தார்.
குழந்தை பிறந்த பிறகும் போராளியாய் இருந்தார்.

அமெரிக்க படையினரால் சுட்டுக் கொள்ளப்படும் வரை
அவர் போராளியாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்.
போராளி வாழ்க்கை ஏன் என்ற போது
சே சொன்னது இதுதான்: “நகைப்புக்குள்ளாவேன்
என்று தெரிந்திருந்தும் ஒரு விஷயத்தை
சொல்ல விரும்புகிறேன்.
ஒரு உண்மையான புரட்சியாளனை
அன்பே வழிநடத்துகிறது.
ஒரு உண்மையான புரட்சியாளனிடம்
இந்த பண்பு இல்லாமல் போகாது.

” உங்கள் காதல் உங்களை சுயநலமற்று வைத்திருக்கிறதா?
உங்கள் காதல் உங்களை சுயமரியாதையை
இழக்க வைக்காமல் இருக்கிறதா?
உங்கள் காதல் சாதி மறுப்பு திருமணம் செய்வதில்
உண்மையாய் இருக்கிறதா?
உங்கள் காதலோடு உங்கள் உணர்வும்
சமூகப் பிரச்சனைகளை பேசுகிறதா?

இதற்கெல்லாம் பதில் உங்களிடம்
 ‘ஆம்’ என்ற பதில் இருந்தால்
உங்களுடைய காதலை மட்டும் ஆதரிக்கிறேன்.
உங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்களும்
தேவையில்லை.

அது வியாபாரிகளால் உருவாக்கப்பட்ட பிசினஸ்!!
– தமிழச்சி 

Comments