நட்பு நகமும் சதையும் போல
இருவர் மனமும் வாழ்வது நட்பு…!
உறவுகள் என்பது எதிர்பார்ப்பு
உண்மை பிறப்பிடம் நல் நட்பு !!
நீ பார்க்காத போதும்
உன்னை நினைக்கும் மனம் நட்பு !!
நீ வெறுத்தாலும் பிரித்தாலும்
மாறாத உறவு நட்பு…!
கடலில் உப்பை பிரிப்பது போல
உன் மனதிலுள்ள தப்பை பிரிப்பது நட்பு !!
இணைந்தோம் மகிழ்தோம் என்றில்லாம்
உனக்கொரு நல் வழியை வகுத்து கொடுத்தால் அது நட்பு !!
நெல்லில் புல்லுருவி வளர்வது போல
நட்பில் உருவாகும் பூசலை கலை எடு…!
உடன் பிறப்பு இரத்த சொந்தம் உறவுகளெல்லாம்
தலை முறை நீ உருவாக்கும் புது உறவு நல் நட்பு!!
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
சுற்றம் நோக்கின் நல் நட்பே … அ
றியாமல் அறிமுகமாகி புரியாததை
புரிவிக்கும் பிறர் பழித்தாலும்
உன்னை வெறுத்தாலும் தாங்கி நிற்கும்
ஒரே தன்னம்பிக்கை நட்பு
உலகத்தின் ஒரே சக்தி
வானமண்டலதின் மிதக்கும் எல்லா கோள்களும்
ஒன்றை ஒன்று ஈர்ப்பது நல் நட்பு நட்பு !!!!!
Comments
Post a Comment