கர்வம்பிடித்த கவிஞன்நான் ….
காலனிடம் மாட்டும்வரை காலிரண்டும் ஓயாது …
தேடித்தேடி தொலைந்தாலும்
தேடும்எண்ணம் தோயாது …
காலம்என்னை கட்டிப்போட்டு
கலகலவென சிரித்தாலும் …
வான்கிரகம் அத்தனையும் வந்து என்னை மிதித்தாலும் …
அண்டமே அதிரும்படி
அன்னைதமிழில் கவிபடிப்பேன் …
பஞ்சபூதம் அத்தனையும்
நெஞ்சடைக்கும் நிலைகொடுப்பேன்
விஞ்ஞானமே வியக்குமளவு
மெஞ்ஞானத்தை இயக்குவேன் …
செந்தமிழால் வேற்றுகிரக வாசியையும் மயக்குவேன் …
ஊழ்வினைக்கும் என்னெழுத்தால்
உயிர் போன பின்னாலும்
உலகத்தில் இயங்குவேன் …
என்னுடைய சரித்தில்
இடம்பெரும்நாள் எந்தநாளோ …?
அந்தநாள் என்னை வந்து சேர
இன்னும் எத்தனைநாளோ …?
என்னுடைய சரித்திரத்தில் இணைவதற்கும்
யோகம்வேண்டும் …
எத்தனைபேருக்கு
அது இருக்கோ இனிமேல்தான் காணவேண்டும் …
தொடர்புடைய பதிவுகள்:
Comments
Post a Comment