சிறகை விரியுங்கள்
உலகைப் புரியுங்கள்
மனதை அறியுங்கள் !!!
அழகைப் படியுங்கள்
விடியல் அழகென்றே விளங்கிக் கொள்ளுங்கள்
வியந்தே விழிகள் பார்க்க விஜயம் அள்ளுங்கள்….. !!
முடங்கிக் கிடைப்பதென்பது முட்டுக் கட்டையாகும்
முன்னேறும் எண்ணம் ஒன்றே
முதல் படி வெற்றிக்காகும்……!!
விழுதுகளின் நுனிகள் கண்டு
விளங்கிக் கொள்ளுங்கள் – அது
விழவில்லை……. மண்ணில்
விரைவாய் சாதனைச் சரித்திரம் எழுத…..
மகிழ்ச்சியாய் தலை குனிந்த
மரத்தின் பேனா நுனி என்று……..
மவுனமாக இருக்கிறது
மண்ணிலே பல வேதங்கள்
மனத்தால் அதனை ரசியுங்கள்
மகிழ்வாய் என்றும் வாழுங்கள்……!!!!
Comments
Post a Comment