கவிதைக்கும் ஒரு கவிதை படைக்கலாம் ,
கவி முனைப்போடு
பேனா முனை காகிதம் தழுவினால் !!
.
தமிழ் மொழி உள்ளவரை
கவிதைக்கோ பஞ்சமில்லை ,
.
தமிழ் மொழியில் நாட்டம் உள்ளவரை
கவிஞர்களுக்கும் பஞ்சமில்லை !!!
.
தமிழ் மொழியில் நாட்டம் உள்ள ஒவ்வொருவனும்
கவிதையை ரசிப்பான்
என்பதில் எவ்வித ஐயமும் இல்லை !!
கவிதைக்கு ஒரு கவிதை
செதுக்கிய தமிழ் மொழியில் வடிதெடுக்கப்பட்ட
தமிழ் வரிகள்
கவிதையின் வரிகள் !!
.
கண்ணீர் துளியை மையாக்கி
படைக்க படுகின்றன
கண்ணீர் கவிதைகள் !!!
.
விழியின் வழியே ஊடுருவி
அவள் அழகை அணு அணுவாய் ரசித்து
படைக்க படுகின்றன , காதல் கவிதைகள் !!!
.
உணர்வை புரிந்து உயிராய் மதித்து
படைக்க படுகின்றன
நட்பு கவிதைகள் !!
.
மனதின் வலியை வாய் வழியாய் சிரித்து
இதயத்தை பேனா முனையாகி
வடிக்க படுகின்றன ,
சோக கவிதைகள் !!!
.
அழகை ரசித்து அனுபவமாய் உணர்ந்து
படைக்க படுகின்றன
இயற்கை கவிதைகள் !!
.
மொத்தத்தில் ,
மனதில் காயங்களோடு ,
தமிழ் மொழியின் ரசனையோடு ,
வாழ்கையின் போராட்டங்களோடு ,
கவியின் மீது கொண்ட ஈடுப்பாட்டோடு ,
படைக்க படுகின்றன ,
♥♥ தமிழ் கவிதைகள் ♥♥
Comments
Post a Comment