![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoZmEOF41FogU4Wx7C_fu2DtoChwUw1vMCz8MV7NAikmz-zjC-YniHgcDlrBkkkCEmOc00_7nK5lCBvsTaRJNbDM8Ionc97HnCHuwM1Gq7b9mhJtnyc4gDTZ6C0KcoVfZuFbl_EFeJ6Jta/s1600/tamil-kavithai-theevu.png)
என் கவிதைகள் சில நேரம் தடுமாறலாம் ,
தமிழ் மொழியின் தொடர்பு விட்டு
பொறியியல் கல்வி பயின்று வருவதால் !!
தமிழ் மொழி தடுமாறுவதில்லை
என் இரத்தில் உறைந்திருப்பதால் !!
என் கவிதைகள் சில உங்களால்
ரசிக்கும் படி இல்லாமல் இருந்திர்க்கலாம்,
ஆனால்
என்னால் பதிவிடப்பட்ட அனைத்து ,
தமிழ் கவிதைகளும் , தமிழ் கதைகளும்,
ரசிக்கப்பட்டவைகளும், ரசனையோடு
என்னால் எழுத பட்டவைகளும் என்பதில்
சிறிதும் ஐயமில்லை !!
காதல் நட்பு கவிதைகளுக்கு மட்டும்
முக்கியத்துவம் கொடுக்காமல் ,
அனைத்து கவிதைகளையும் ரசிக்க
கற்றுக்கொள்ளுவோம் !!
என் தமிழ் கவிதைத் தீவு தளம்
பல தடைகளை தாண்டி
நாளுக்கு நாள் முன்னேறி கொண்டிர்கிருகிறது
என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன் !!
என்னை பாராட்டிய,
இந்த கவிதை தளத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்த,
மற்றும் என் நட்பு வட்டாரத்தில் தொடரும்
அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த
நன்றிகள் !!
தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் ,
தமிழ் மொழியின் அருமை
இந்த உலகம் முழுவதும் பரவட்டும் !!
மூச்சித்த காற்று
முடிவு பெறும்வரை,
முனைப்போடு , உங்கள் வாழ்த்துகளின்
முன்னிலையில் ,
முடிவுறா என் கவிதை பயணம் தொடரும் !!
என்றும் பேனா முனையில் ,
>>> ♥ அரவிந்த் யோகன் ♥ <<<
Comments
Post a Comment