புகைப்பிடித்து புதைத்து பார்த்தேன்
அவள் நினைவுகளை
புகையாய் போனது என் வாழ்க்கை. !!
மது அருந்தி
மறக்க நினைத்தேன்
மண்ணாய் போனது என் வாழ்க்கை ..!!
ராஜாவாய் இருந்தேன்
அவள் நினைவுகளை சுமக்கும் முன்பு ..!!
பித்தன் ஆகி விட்டேன்
அவள் நினைவுகளை சுமந்த பின்பு ..!!
வலியோடு தான் என் வாழ்க்கை
கண்ணீர் துடைக்க கூட
ஒருவர் இல்லாமல் !!
விழித்து கொண்டேன், என் போராட்டத்தில் !!
சொந்த கவலைக்காக சுயநலமாய்
சிந்தித்து விட்டேன்
புகை மது பழகத்திற்கு அடிமையாகி!!
இனி இந்த மண்ணில் என் கால் ரேகை பதியும்
வெற்றியின் படிக்கட்டுகளாய் !!
—————————————————————————————
காதலில் தோற்ற நண்பர்களே !
வாழ்க்கை ஒரு புதராக இருக்கலாம்
மனவலிமையோடு கால் பதி ,
உனக்கான ஒரு பாதை உருவாகும் !!
தூக்கி எறிந்த உறவுகள் உன் பின்னால் வரும் !!
இதுவே உண்மை காதலின் வெற்றி !!!
தொடர்புடைய பதிவுகள் :
Comments
Post a Comment