Tamil karuthulla kavithai | கருத்துள்ள கவிதைகள்

சினிமாக்காரர்களிடம்
நாட்டை ஒப்படைக்காமல் இருந்திருந்தால்,

அம்பானி கூட்டத்திற்கு
நாட்டை அடமானம் வைக்காமல் இருந்திருந்தால்,

கிரிக்கெட் வீரர்களுக்கு
அள்ளி அள்ளி கொடுக்காமல் இருந்திருந்தால்,

அரசியல்வாதிகள்


 நம் நாட்டை பங்கு போடாமல் இருந்திருந்தால்,

வெளிநாட்டு வங்கிகளில்
இந்தியர்கள் கணக்கு வைக்காமல் இருந்திருந்தால்….

நான் என் நாட்டிலேயே இருந்திருப்பேன்…

என் மக்களோடு இருந்திருப்பேன்…

என்ன தான் சம்பாதித்தாலும்,

என்றைக்குமே நாங்கள் இங்கு கூலிகள் தான்..

Comments