செதுக்க பட்ட சிலையாக
பல பெண்களின் வாழ்க்கை!
.
பிறக்கும் போதே அவளுக்கான
கணவனை முடிவு செய்யும் பெற்றோர்கள்!
.
படிக்கும் போதே அவள் கனவுகளை
முடக்கும் பெற்றோர்கள் !
.
அறியாமை என்னும் விதையை பெண் குழந்தைகள்
மனதில் விதைக்கும் பெற்றோர்கள் !
.
படிப்பது எதற்கு , வாழ்வது எதற்கு
என்பதை அறியாத அந்த குழந்தைகள்(பெண்கள்)
.
உடுக்கும் உடை முதல் பள்ளி , கல்லூரி , படிப்பு
கணவன் வரை
அனைத்தையும் தேர்வு செய்யும் பெற்றோர்கள்
.
பள்ளி படிப்பு முடியும் முன்
மாமன் பையனை கை காட்டி இவனை தான்
திருமணம் செய்ய வேண்டும் என்று
வற்புறுத்தும் பெற்றோர்கள்
.
நமது வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது
என்பதை அறியும் முன்
வாழ்கையை தொலைத்த பெண்கள்
.
பள்ளியிலும், கல்லூரியிலும் பெற்றோர்களுக்கு
பிடித்த பாடத்தை பெண்ணை படிக்க வைத்து,
18 முதல் 21 வயதிற்கு முன்னாள் அந்த பெண்ணின்
திருமணத்தை முடித்து தான் எதையோ சாதித்து விட்டதாக
கர்வம் கொள்ளும் பெற்றோர்கள் ,
.
இவர்களெல்லாம் என்று மாறுவார்கள் ??
.
பெட்டி பாம்பாய் இருக்கும் இந்த பெண்கள்
என்று பட்டமாய் பார்பார்கள்??
.
இது தான் சில பெண்களின் வாழ்க்கை??
.
நமது குழந்தைகள் இயந்திரம் இல்லை என்பதை
உணர்வார்களோ இந்த பெற்றோர்கள் ??
.
பெண்களுக்கும் தனி ஆசைகள் உண்டு ,
சில பிரிவு படிப்புகளில் பெண்களுக்கும் ஆர்வம் உண்டு ,
பெண்களுக்கும் சுய சிந்தனை உண்டு ,
பெண்களுக்கும் பல லட்சியங்கள் உண்டு ,
இதையெல்லாம்
அறிவார்களா இந்த பகுத்தறிவற்ற பெற்றோர்கள் ??
.
விடியலை நோக்கி………………….
(இது சில ஆண்களுக்கும் , பல பெண்களுக்கும் பொருந்தும்)
தொடர்புடைய பதிவுகள் :
Comments
Post a Comment