India-பணமும் இந்தியாவும்

Corruption in India-tamil kavithai-panamum indiavum

பணத்தால் தரை தட்டியது நீதியின் தட்டு 
.
பணமற்றவனுக்கு சிறைக்குள் தட்டு!!
.
நேர்மையாய் இருந்தால் பணியிடை மாற்றம் 
.
நேர்மையற்றவனுக்கு வாழ்கையில் முனேற்றம்!!
.
பணமிருந்தால் மருத்துவமனையில் 
தரமான சிகிச்சை 
.
பணமற்றவனுக்கு கடமைக்காக  ஒரு சிகிச்சை!!
.
வயிற்று பிழைப்புக்கு 50, 100 திருடினால் திருடன் 
.
பலகோடி திருடினால்  தலைவன் !!
.
பணமுள்ளவனுக்கு வாய்தா என்ற பெயரில் 
சுக வாழ்க்கை 
.
பணமற்றவனுக்கு ஜெயிலுக்குள் சோக வாழ்க்கை !!
.
பணமிருந்தால் தரமான கல்வி 

பணமற்றவனுக்கு அனுபவமே கல்வி  !!

நாட்டிற்காக போர்முனையில் உயிரை தொலைக்கிறது 
ஒரு கூட்டம் 
.
எதிரி என தெரிந்தும் கொஞ்சி உறவாடுகிறது 
மற்றொரு கூட்டம் !!
.
கற்பழிக்க பட்டவள் மரணத்தின் பிடியில் 
.
கற்பழித்தவன் ஒரு மாதத்தில் ஜாமீனில் !!
.
உண்மையை மக்கள் அறிய சொல்லி 
ஜெயிலுக்குள் சிலர் 
.
ஜால்ரா  அடிப்பதால் அரியணையில் பலர் !!
.
பணம் பேசிய பின்பே திறமைக்கு வாய்ப்பு 
.
இதையெல்லாம் விட வேண்டுமா இந்தியாவிற்கு 
அவமானம் வேறு !!!
———————————————————————————-
tamil kavithaigal: 
  • india arsiyal kodumai
  • corruption in india
  • tamil- indiyavil panam
  • tamil kavithai about oolal
  • makkal villipunarvu kavithai

——————————————————————————-
தொடர்புடைய கவிதைகள் :

————————————————————————————-


Comments