My indipendence day experience aug15

indipendence day – suthanthira thinam – en anubavam – suthanthira thina kathai
vithiyaasa maana nigalvu – magilchiyaana tharunam – vethanaiyaana nigalvu

சுதந்திர தினம் – என் அனுபவம்

நேற்று எல்லோரும் சுதந்திர தினத்தை
மகிழ்ச்சியாக கொண்டாடி இருபிர்கள் !!
.
நான் எனது சுதந்திர தின அனுபவத்தை பகிர்கிருகிறேன் ,
.
காலை விடியும் முன்னே தூத்துக்குடி மாவட்டத்தை
நோக்கி என் பயணம் தொடங்கியது !!
.
கோவில்பட்டியை சென்றடைந்தேன் , பரபரப்பான வாகனகள்,
தங்கள் பணியை கவனிக்கும் மக்கள் என சென்னை போலவே தோற்றமளித்தது !!
.
நான் கவி செம்மல் பாரதி பிறந்த எட்டய புரத்தை நோக்கி நகர்ந்தேன் ,
பாரதியின் வீடு, சிலை , அவரின் பெயரால் பள்ளி கல்லூரிகள்

என அரசாங்கம் அவருக்கு தனி மரியாதையை கொடுத்ததை
நினைத்து மகிச்சியுடன் என் பயணத்தை தொடர்ந்தேன் !!
.
அப்புறம் தான் எனக்கு அதிர்ச்சியாகி போனது !!
செப்பனிடாத சாலைகள் , வறண்டு போன குளங்கள் ,
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தரிசு நிலங்கள், பாழடைந்த வீடுகளில் வசிக்கும் அப்பாவி மக்கள் ☻
.
பெரலோவன் பட்டி , சங்கிலி பட்டி என பல பட்டி என்ற இணைபுடனே பல ஊர்கள் ,
.
நான் அந்த கிராமத்து பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக அம்மாவுடன் சென்றேன் , சென்றதோ ஏசி காரில் அனுபவமோ மாட்டு வண்டி அனுபவம் !
.
வழியெங்கும் உழைத்து களைத்த பெண்கள் , பசியாலும் , வெயிலாலும்
வாடிய குழந்தைகள் , ஆங்கங்கே மிதிவண்டியில் சில பருவ பெண்கள் !!
பெருந்தில்லா சாலைகள் , கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடையில்லா சாலைகள் , குத்தி கிழிக்கும் கருவேல மரங்கள் நிறைந்த நிலங்கள் ,
தமிழ் நாட்டில் இப்படி ஒரு ஊரா , நமக்கும் சுதந்திரம் ஒரு கேடா ??
.
பாரதி பிறந்த மாவட்டமா இது சுதந்திரம் பெரும் போது இருந்தது போலவே இன்னும் இருக்கிறது , பாரதி இருந்திருந்தால் ரத்த கண்ணீராலே கவி வடித்திருப்பான் !!
.
ஒரு வழியாக பள்ளியை அடைந்தேன் , சிறப்பான வரவேற்ப்புடன்
விழாவை காண சென்றேன் !! கருப்பாக இருந்தாலும் சிவந்த மனம் படைத்த ஆண்கள் , பெண்கள் ♥  தாவணியில் ஜொலித்த பருவ பெண்கள் ♥
.
ஜீன்ஸ் ஆடையுடனோ , கவர்சியனோ ஆடையிலோ , வாயில் ஆங்கிலத்திலோ ஒரு பெண்கள் கூட இல்லை , என் கண்ணை என்னாலையே
நம்ப முடிய வில்லை !! அணைத்து பெண்களும் சுடிதாரிலும் , பள்ளி சீருடையிலும் , தாவநியிலுமே இருந்தனர் !!
.
நடை பெற்ற நடனங்கள் கூட நாட்டு புற பாடல்கள்  தான் !!
.
நம் ஊரில் வீட்டை சுற்றி கோவில்களும் ,  மருத்துவ மனைகளும் , பள்ளிகளும் , கடைகளும் இருக்கும் , அனால் அங்கு பல ஊர்கள் சேர்த்து ஒரு பெரிய இந்து கோவிலும், ஓரிரு பள்ளிகளும்கடைகளும் மட்டுமே இருந்தன !!
அவர்களை போல ஒற்றுமையுடனும் , அன்போடும் பழகும் மக்களை
காண்பதே அரிது தான் !!
.
எல்லாமே எனக்கு சற்று வித்தியாச அனுபவம் தான் !! சுதந்திர தினத்தில்
இந்த அனுபவம் மறக்க முடியாது !! மாலை பிரியா மனதுடன்
பள்ளியை விட்டு, வீட்டை நோக்கி நகர்ந்தேன் !!
.
( உங்களுக்கும் இதே போல வித்தியாசமான அனுபவம் இருந்தால்
கமெண்ட் செய்யுங்கள்  நண்பர்களே )
-நன்றி 

Comments