Vilipunarvu tamil kavithai

tamil vilipunarvu kavithai, tamil ilagnarkalukku arivurai, tamilan vilipunarvu kavithaigal,
arivurai kavithai, தமிழ் விழிப்புணர்வு கவிதை , தமிழ் அறிவுரை கவிதை

Vilipunarvu kavithai – விழிப்புணர்வு கவிதை

இளைஞா ,,
.
சாதிக்க பிறந்த நாம் சோதிக்க படுகிறோம் !!
.
வெட்டிய பாம்பிற்கே வீரியம் குறையா
ஆனால் நாம் துடிக்கும் மீனாய் தரையில் !!
.
அண்டி பிழைக்கும் அயல் நாட்டு கம்பெனிகள் தமிழ் நாட்டில்
நாமோ தெண்டி பிழைக்கும் நிலையில் இவனிடத்தில் ,


நமது விட்டு கொடுக்கும் மனப்பான்மை இதுதானோ ???
.
பத்தாம் வகுப்பு படித்தவனெல்லாம் அரசு அதிகாரி
படித்த இளைஞர்கள் நாமோ அவனுக்கு கோமாளி ,
பாமர மக்களையும் நாயாய் அலைய வைப்பான் ,
தட்டி கேட்டால் இதுவே எங்கள் பணி என்பான்
சகிப்பு தன்மையை இவனிடம் தான் நாம் கற்றோமோ ??
.
தமிழ் மொழிக்கு தனி பெருமை அயல் நாட்டில்
நமக்கோ தமிழ் பேச வெட்கம் நம் நாட்டில்
நமது அறியாமை இங்கு தான் பிறந்ததோ ???
.
எழுத படிக்க தெரியாதவன் எல்லாம் அரசியல்வாதி ,
நாமோ அவனுக்கு அடிமைவாதி
நமது அடிமைத்தனம் இங்கு தான் பிறந்ததோ ??
.
நமக்கு கல்வியை விட கடவுள் முக்கியம்
மருத்துவரை விட கடவுள் நம்பிக்கை முக்கியம்
இங்கு தான் நமது மூட நம்பிக்கை பிறந்ததோ??
.
பண எடை தாங்காமல் ஏழைகளை  எள்ளி நகையாடுகிறது
நீதி தேவதையின் தட்டு
இங்கு தான் நமது உணர்சிகள் முடக்க பட்டதோ ???
.
[ இது யாரையும் புண்படுத்தும் பதிவு அல்ல ,
உணர்ந்தவனுக்கு மட்டுமே இதன் முழு பொருள் புரியும் ]
.
நாளைய இந்தியா, தன்னலமற்ற பகுத்தறிவுள்ள
இளைஞர்களை நோக்கி ☺ ♥
.
-தொடரும்
.
READ HERE ALSO:

2. என் கவிதை என் மொழி -அரவிந்த் யோகன்
———————————————————————————————-
tags: tamil vilipunarvu kavithai, tamil ilagnarkalukku arivurai, tamilan vilipunarvu kavithaigal, arivurai tamil kavithai, தமிழ் விழிப்புணர்வு கவிதை , இளைஞன்
tamilan kavithaikal, tamil poem about tamilans, தமிழ் அறிவுரை கவிதை
2015 varungaala india, unmaiyaana thalaivan, vaalkai soga vilipunarvu 2014.

Comments