lovers day arivurai kavithai, kathalar thina vilipunarvu padaippu, 2015 kathalar thinam sirppu katturai, lovers day article in tamil, advice kavithai for kathalar thinam 2015, valentence day 2015
இது முதல் முதலில் நான் எழுதும் கட்டுரை வடிவிலான படைப்பு !!!
இது காதலிக்காதவர்கள், காதலிப்பவர்கள் , பெற்றோர்கள் என அனைவரும் படிக்க வேண்டிய கட்டாயமான பதிவு . நான் இந்த தமிழ் கவிதை தீவு தளத்தில் நூற்றிற்கு மேற்பட்ட காதல் கவிதைகள் எழுதியுள்ளேன் !! எனவே இந்த படைப்பை எழுதுவது அவசியம் !! காதல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அறிவுரை படைப்பு !!! தவறாமல் நீங்களும் படித்து நண்பர்களுக்கும் பகிருங்கள் !!! இதில் உள்ள அனைத்து கருத்துக்களும் உண்மை சம்பவங்களும் அனுபவத்தால் உணர்தவை !!
காதலர் தினம் 2015:
காதலர் தினம் ஒரு காலத்தில் அன்பை வெளிபடுத்தும் தினமாக இருந்து வந்தது ஆனால் இன்று காமத்தை வெளிபடுத்தும் தினமாக மாறி வருகிறது !!
12 முதல் 18 வயது ஒரு இக்கட்டான வயது, யாரையும் மதிக்காத வயது , எளிதில் காதல் வசப்படும் வயது. காதல் காமமாக மாறும் வயது !! எளிதில் காதலில் விழுந்து எளிதில் கண்ணீரால் காதல் பிரியும் வயது !!
காதலின் பெயரால் பல பெண்கள் கற்பை இழந்து , வெளிக்காட்டிகாமல் கண்ணீரால் காதலை கழுவும் வயது . இப்படிலாம் நடக்காது என்று நினைத்தால் நீங்கள் முதல் முட்டாள்கள் உங்களை சுற்றி உங்களை சுற்றி உங்கள் நட்பு வட்டாரத்தில் நடக்கும் அவலங்கள் தான் இவை . பலருக்கு தெரிவதில்லை . எனவே பெண்கள் இன்னும் விழிப்புணர்வு முழுமையாக அடைய வில்லை !! எனவே பருவ வயதை கவனமாக கடப்பது ஒவ்வொரு பெண்ணின் கடமை !!
என்ன ஆண்கள் எல்லாம் நாங்கள் நல்லவர்கள் என்று நினைகிறீர்களா ?? உங்களை சுற்றி உள்ள ஆண்களையும் கவனியுங்கள் !! பெண்கள் ஏமாற்றும் காலம் கடந்து ஆண்கள் ஏமாற்றும் காலமாக மாறி வருகிறது !!
READ HERE ALSO:
Unmai Aanmai kavithai – உண்மை ஆண்மை
உண்மையான காதல் :
திருமணம் முடியும் வரை ஒரு பெண்ணை தொடாமல் காதலிப்பதே உண்மையான காதல் . ஒரு ஆணை முழுமையாக காதலிக்க தொடங்கி விட்டால் கற்பு நெறி மாறாமல் காதலிப்பதே உண்மையான காதல் !!
தன் தகுதியை உயர்த்தி வெற்றி பெறுவதே உண்மையான காதல் !!முத்தங்கள் பகிர்வதை கைபேசியோடு நிறுத்தி கொண்டாலே போதும் !! பல தவறுகள் அறிவின்மையால் நடத்தை தடுக்கலாம் !! நான் உண்மையான காதலை பற்றி பல கவிதைகள் எழுதியுள்ளேன் , கணிணியில் என் தளத்தை பார்வையிடும் போது தேடி படியுங்கள் !!
காதலை வெளிபடுத்துவது எப்படி ??
பார்த்த வுடனே காதல் பழகிய பின் காதல் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக காதலிகிறார்கள் . பழகிய பின் காதல் கருத்து வேறுபாடு இல்லாத காதலாய் அமையும் !!! ஆணோ பெண்ணோ காதலை தைரியமாக வெளிபடுத்துங்கள் !! ஏமாற்றும் எண்ணம் கொண்டவர்கள் எல்லாம் காதலில் வெற்றி பெரும் போது உண்மையாக காதலிபவர்கள் நாம் ஏன் தயங்க வேண்டும் !! விருப்பம் இல்லாத பெண்ணையோ ஆணையோ யாரும் கட்டாய படுத்தாதீர்கள் !!! இருவரும் காதலிக்க தொடங்கிய பின் மட்டும் காதலில் முழுமையாக இறங்குங்கள் . காதலி /காதலனுக்கு உண்மையாக இருங்கள் !!
காதலி சமாதிக்க வில்லை /காதலன் சம்மதிக்க வில்லை என்று தற்கொலை முயற்சிக்கு செல்வதெல்லாம் முட்டாள் தனம் !! காதல் உண்மையானால் உங்களை தேடி உங்கள் காதல் வரும் !!!
காதலில் வெற்றி பெறுவது எப்படி ??
உங்கள் வீட்டில் காதலை சம்மதிப்பார்களா , எத்தனை வயதில் திருமணம் செய்து வைப்பார்கள் என்பதை எல்லாம் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கும் முன்னே முடிவு செய்து விடுங்கள் !! உங்கள் காதல் வெற்றி பெற உங்கள் தகுதியை உயர்த்தி கொள்ளுங்கள் !!
காதலில் தோற்க காரணம் :
சமமான வயது ஆண் பெண்ணகளை காதலிக்கும் காதலர்கள் பெருபாலானோர் சூழ்நிலையால் காதலை இழக்கிறார்கள் !! காரணம் இருவருக்கும் ஒரே வயது எனில் 23 வயதில் பெண்ணுக்கு திருமணம் பண்ண பெற்றோர்கள் துடிப்பார்கள் !! அப்போது ஆணுக்கு ஒழுங்கான ஒரு வேலை கூட இருக்காது !! ஆணின் பெறோரும் திருமணதிற்கு சம்மதிக்க மாட்டார்கள் !! இந்த நிலையில் தான் பெரும்பாலான உண்மை காதல் பிரிகிறது !! அல்லது ஓடி போய் திருமணம் செய்து பண வசதி இல்லாமல் கஷ்ட படும் காதலர்கள் பலர் !!! கருத்து வேறுபாட்டினால் பிரிவோர் பலர் பார்த்தவுடன் காதலித்தவர்கள் .
பெறோர்கள் தெரிய வேண்டியது :
தன் குழந்தைகள் வாழ்கையை தொலைபதர்க்கு தாங்கள் தான் காரணம் என்பதை உணர வேண்டும் !! என்ன என் மகள் காதலித்தால் அதற்க்கு நான் ஏன் காரணம் ?? என்று நினைகிறீர்களா ?? அன்பு வீட்டில் மறுக்க படும் பெண்கள் மற்றும் ஆண்கள் தான் பெரும்பாலும் காதலை தேடி ஓடுகிறார்கள் !!! தந்தையின் அன்பு இருக்கும் எந்த பெண்ணும் , தாயின் அன்பு முழுமையாக இருக்கும் எந்த ஆணும் பருவ வயதில் காதல் வசபடுவது இல்லை !!! காமத்தால் வாழ்கையை தொலைப்பதும் இல்லை !!! பணம் பணம் என்று அலையாமல் குழந்தைகளுக்காக நேரம் செலவிடுங்கள் !! நம் குழந்தைகளின் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய ஒரு தோழனாய் எப்போதும் இருங்கள் !!
சாதி மதத்தை காரணம் காட்டி காதலர்களை பிரிக்காமல் , நீங்கள் விரும்பும் தகுதியை உருவாக்க கால அவகாசம் கொடுத்து காதலை இணைத்து வையுங்கள் !!! கோபத்தால் சாதிக்க முடியாததை அன்பு சாதிக்கும் !!
காதலிக்க அனைவருக்கும் உரிமை உண்டு , சாதி மதம் அழகு அனைத்தையும் கடந்தது தான் உண்மையான காதல் !!! வாழ்கையில் வெற்றி பெற கடுமையாக போராடுங்கள் காதல் தானாய் அமையும் !!! காதலை நம்பி கற்பை இழக்காதீர்கள் !! இணையம் முழுவதும் தமிழ் பெண்களின் ஆபாச படங்கள் தான் !! காமத்தை அடக்காத யாரும் காதலில் சாதிக்க முடியாது !!! ஏமாற்றும் ஆண்களை நம்பும் பல பெண்கள் உண்மையாக காதலிக்கும் ஆணை மதிபதில்லை என்ற கருத்து உண்டு , அதும் ஓரளவு உண்மைதான் !!
எதனை தான் அறிவுரை சொன்னாலும் ஒரு குறிப்பிட்ட வயது வரை பெண்கள் யார் அறிவுரையும் கேட்பதில்லை நீங்கள் அனுபவ பட்டு உணரும் வரை !! இது முக்கியமாக காதலின் பெயரால் கற்பை இழந்து கொண்டிர்க்கும் பெண்களுக்காகவும் , ஆண்களும் பெண்களும் காதலை புனிதமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு மணி நேரம் உங்களுக்காக செலவிட்டு பதிவிட்டு உள்ளேன் !! இந்த பதிவை சிறந்த அனுபவமாக எடுத்து வாழ்கையில் வெற்றி பெற போராடுங்கள் !!! வெற்றி நிச்சயம் !!
READ HERE ALSO:
திருமணம் முன் காமம் கடந்த காதல் வாழ்க !!
தகுதியை உருவாக்கி காதலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
உண்மை காதல் அழிந்தாலும் உயிர் வாழும் !!!
காலமின்மையால் பதிவை சற்று குறைத்து தான் பதிவிட்டுள்ளேன் !! பதிவை நன்றாக படித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் !!! இந்த காதலர் தினம் இனிதாய் அமையட்டும் !!! நேரம் கிடைத்தால் மீண்டும் ஒரு நல்ல பதிவில் சிந்திப்போம் !! உங்கள் கருத்துக்களை பதிவிட மறவாதிர்கள் !!
நன்றி !!!
.
நட்புடன்
அரவிந்த் யோகன் ♥
TAGS:
kathalar thinam sirappu pathivu, kathalar thina katturai for all, kathalar thina arivurai padaippi,
lovers day arivurai kavithai, kathalar thina vilipunarvu padaippu, 2015 kathalar thinam sirppu katturai, lovers day article in tamil, advice kavithai for kathalar thinam 2015, valentence day 2015
Comments
Post a Comment