முதன்மந்திரி மெதுவாக எழுந்து காவலாளிகள் அருகில் வந்தார். ‘இவன் மேல் கூறபட்ட இந்த குற்றம் ஊர்ஜிதமாகிவிட்டதா?’ ‘ஆமாம் முதன்மந்திரியாரே. இந்த கொடும் செயலை இவன் செய்துகொண்டிருக்கும் போது பார்த்த வழிப்போக்கர்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருந்து முறையாக சாட்சியங்களும் வாக்குமூலங்களும் பெற்றாகிவிட்டாயிற்று. மேலும் இவனே தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்ட்டான்’ ‘அப்படியா’ என்றார் முதன்மந்திரி. பிறகு அந்த குற்றவாளியிடம் சென்று, ‘நீ அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தது உண்மையா?’ என்றார். ‘ஆமாம் அய்யா. குடிபோதையில் இருந்ததால் அப்படி செய்துவிட்டேன். என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் அய்யா’ என்றான். அப்படி அவன் சொல்லி முடித்த அடுத்த வினாடியில் அவன் நெஞ்சினில் கூரிய வாள் பாய்ந்தது. ‘ஆ’ என்று அலறிக்கொண்டே கீழே விழுந்தான் அவன். சபையினர் அதிர்ந்துப் போய் நின்றனர். மன்னரும் அதிர்ந்துப்போனார். ஏனென்றால் முதன்மந்திரிதான் அந்த வாளைப் பாய்ச்சியவர். இவ்வளவு வயதிலும், மின்னல் வேகத்தில் தன் உறையில் இருந்து அவர் தனது வாளை உறுவியவர், உறுவிய வேகத்திலேயே அந்தக் கயவனின் நெஞ்சினில் அதைப் பாய்ச்சி விட்டிருந்தார். அவன் கீழே விழுந்து துடிதுடித்துக்கொண்டிருந்தான்.ரத்தம் பீரிட்டுக்கொண்டு வெளியே வந்துக் கொண்டிருந்தது. ஒரு வேகத்தில் அரண்மனை தலைமை மருத்துவர் அந்தக் கயவனை நோக்கிவர முற்பட்டார். ‘யாரும், இவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இவன்அருகே வரக்கூடாது’ என்று முதன்மந்திரி கர்ஜித்தார். தலைமை மருத்துவர் அங்கேயே நின்று விட்டார். முதன்மந்திரி பிறகு மன்னரைப் பார்த்து அமைதியாக ஆனால் தீர்க்கமாக பேசினார். ‘மன்னா. எல்லாத் திருட்டும் ஒன்றல்ல. எல்லா கொலையும் ஒன்றல்ல. நான் ஏற்கெனவே கூறிய எடுத்துக்காட்டுச் சூழ்நிலைகளைகூறி ஒரு திருட்டை நியாயப் படுத்தமுடியும், ஒரு கொலையைக் கூட நியாயப் படுத்த முடியும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் நியாயமே படுத்த முடியாத குற்றம்ஒன்று உண்டு எனில் அது ‘பாலியல் பலாத்காரம்’தான். தனது சகோதரியை ஒருவன் பலாத்காரம் செய்தான் என்றால் கூட, பதிலுக்கு அவன் சகோதரியை இவன் பலாத்காரம் செய்யமுடியாது. வேண்டுமானால் அவனை இவன் கொல்லலாம். ஆனால் பலாத்காரத்தை எந்த நிலையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆதலால்எந்த பலாத்காரத்திற்கும் தண்டனை மரணம் தான். இல்லை, உங்களில் யாரேனும், பலாத்காரத்தை நியாய படுத்த ஒரு, ஒரேயொரு, காரணத்தைக் கூறமுடியுமானால், இங்கு வந்து நின்று கூறிவிட்டு, இதோ, கீழே விழுந்து துடித்துக்கொண்டிருக்கும் இந்தக் கயவனை காப்பாற்றுங்கள். கூடவே நானும் இக்கணமே, இதே வாளை என் நெஞ்சினில் பாய்த்துக்கொண்டு உயிரை விட்டுவிடுகின்றேன். இல்லையென்றால், இந்தக் கயவன் மரணம் அடையப்போவதை யாரும் தடுக்காதீர்கள். ஆமாம், பலாத்காரத்துக்கு என்றுமே மரணம்தான் தீர்ப்பு’ என்று நின்றுக்கொண்டிருக்கிறார். பின்குறிப்பு: உங்களில் யாருக்கேனும் பலாத்காரத்தை நியாயப்படுத்த முடியும் என்று தோன்றினால், உங்கள் வாதத்தை வையுங்கள். முதன்மந்திரி இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறார். பின் பின்குறிப்பு: இதைப் படிக்கும் இளைய தலைமுறையை சார்ந்தவர்களே, நாளைய ஆட்சி உங்களிடம். ஒரு முடிவெடுங்கள்.. Must share…!

Comments