அட்டை முன்னுரை முகவுரை மட்டும்
வெள்ளைத் தாள்களில் எங்கள் புத்தகம்
அப்புறம் கொஞ்சம் பழுப்பைச் சேர்த்தோம்
இப்போது கருப்பே முழுவதும் கருப்பாய் நிறையத் தாள்கள் சேர்த்தோம்
எழுத்தாய் சிவப்பில் மட்டும் எழுதினோம்
எங்கும் சிவப்புச் சிதறல் என்று
செய்து தாள்கள் நிறைத்தோம்
இன்றை யசெய்தியில் இன்னொரு ஓவியம்
வரைந்தது தோட்டாத் தூரிகை
எங்கள் துரோகிகள் குறையக் குறைய
சிவப்பில் நிறையும் கருப்புத் தாள்கள்
வெள்ளைத் தாளில் ஒருபின் அட்டை
உடனே உலகம் விரும்பும் – இல்லை
எங்கள் நேரம் அதற்காய் இல்லை
சிவப்பில் நிறைக்கக் கருப்புத் தாள்கள்
நிறைய உண்டு எங்கள் வசத்தில்……..
வெள்ளைத் தாள்களில் எங்கள் புத்தகம்
அப்புறம் கொஞ்சம் பழுப்பைச் சேர்த்தோம்
இப்போது கருப்பே முழுவதும் கருப்பாய் நிறையத் தாள்கள் சேர்த்தோம்
எழுத்தாய் சிவப்பில் மட்டும் எழுதினோம்
எங்கும் சிவப்புச் சிதறல் என்று
செய்து தாள்கள் நிறைத்தோம்
இன்றை யசெய்தியில் இன்னொரு ஓவியம்
வரைந்தது தோட்டாத் தூரிகை
எங்கள் துரோகிகள் குறையக் குறைய
சிவப்பில் நிறையும் கருப்புத் தாள்கள்
வெள்ளைத் தாளில் ஒருபின் அட்டை
உடனே உலகம் விரும்பும் – இல்லை
எங்கள் நேரம் அதற்காய் இல்லை
சிவப்பில் நிறைக்கக் கருப்புத் தாள்கள்
நிறைய உண்டு எங்கள் வசத்தில்……..
Comments
Post a Comment