தெய்வநம்பிக்கை-periyaar pagutharivu

சாதாரணமாக ஒரு மனிதன் “பக்திமானாய் இருக்கிறான்”, 
“அவன் தெய்வநம்பிக்கை உடையவன்” என்றால் 
அதற்கு அடையாளம் என்ன?

1. பட்டை நாமம்

2. விபூதிப்பட்டை

3. கழுத்தில் கொட்டை

4. வாயில் ராமா – ராமா, சிவா – சிவா என்பது

5. எதற்கெடுத்தாலும் ஆண்டவன் செயல், பகவான் செயல் என்பது

6. கோயில்களுக்குப் போவது

7. அங்கு போய் கண்ணை மூடிக்கொண்டு கையைக் கூப்பி நிற்பது

8. அப்போது வாயால் எதையாவது முணுமுணுப்பது

9. நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து கும்பிடுவது

10. மனதில் எதையாவது விரும்புவது

11. கோயில் பார்ப்பான் எதையாவது கொடுத்தால் அதை வாங்கி தலையில் கொட்டுவதும், வாயில் கொஞ்சம் போட்டுக் கொண்டு மீதியை உடலில் கொஞ்சம் தடவிக் கொள்வது

12. பிறகு சாமி அறையைச் சுற்றுவது

13. தேவாரம், பிரபந்தம், இராமாணம், பாரதம் முதலிய நூல்களைச் சத்தமாய் படிப்பது

14.வீட்டில் பூசை அறை வைத்து பூசை செய்வது

15. உற்சவங்களுக்குப் போவது

16. ஸ்தல யாத்திரை செய்வது

17. இவை முதலியவை மாத்திரமல்லாமல் 

பார்ப்பனர்களை சாமி என்று கூறி கண்டவுடன் கும்பிடுவது, 
அவனுக்குக் கண்டபடி அள்ளிக் கொடுப்பது வரை 
செய்யும் காரியங்கள் தான் 
இன்று பக்தியாய் இருக்கின்றதே ஒழிய, 
மற்றபடி மனிதனின் நல்ல எண்ணம், 
நாணயம், ஒழுக்கம், நேர்மை, இரக்கம், ஈவு 
முதலிய நல்லவைகளைப் கொண்டிருப்பதோ,
மோசடி, துரோகம், பித்தலாட்டம், திருட்டு,
புரட்டு, பொய், ஏமாற்றுதல் முதலிய 
தீய குணங்கள் இல்லாமல் இருப்பதோ 
ஒருநாளும் ஒருவரிடமும் பக்தியாய், 
தெய்வ நம்பிக்கையாய் இருப்பவர்களிடம் 
காண முடிவதில்லை.

– பெரியார்,
(‘விடுதலை’, 29.12.1965)

Comments