அயல்நாட்டு இந்தியர்கள்-soga varikal

பிழைப்பு தேடி வந்தவர்களென்று நினைத்தோம்!

இல்லை நாங்கள் இறப்பு தேடி வந்தவர்கள்!

அயலூர்க்காரர்கள் நாங்கள்
எனவே தான் அயராமல் உழைக்கிறோம் !

பத்து ரூபாய் அதிகம் கிடைக்குமென்றால்
பட்டினி கிடந்தாவது அவ்வேலையை முடிப்போம்!

இரவு பகல் எங்களுக்கு கிடையாது !
நல்லது கெட்டது எங்களுக்குப் புரியாது !

வாய் நிறைய பாக்கிருக்கும்
மதியநேரம் வந்தால் அதுவே எங்கள் பசி போக்கும் !

அந்தரத்தில் வேலை ஆயிரமடி பள்ளத்திலும் வேலை
எங்கிருந்தாலும் போய் உழைப்போம் !


சில நேரங்களில் எங்களின்
உயிரைக்கூட கொடுப்போம் !

எந்திரத்தில் கோளாறு என்பார்கள்

ஏதேதோ காரணம் என்பார்கள் …

எங்களுக்குள் ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் எழும் !

எந்திரத்தில் கோளாறா?

இல்லை எந்திரம் வாங்கியவன் கோளாறா??
என்று விடை ஏதும் தெரியாது !

விடியும் வரை கலங்கி இருப்போம் !
விடிந்த பின் விஷயம் மறப்போம் !
இதுவே வாடிக்கையானது !

எங்கள் வாழ்வே வேடிக்கையானது!
நாங்கள் பிழைப்பு தேடி வந்தவர்களென்று நினைத்தோம்!

இல்லை நாங்கள் இறப்பு தேடி வந்தவர்கள்!

Comments