கண்ணாமூச்சு ஆடத்தான் –
கண்ணேநீ ஓவியத்தில் ஒளிந்தாயோ ?! …
இல்லையென் கண்ணுக்குத்தான்-
அன்பேநீ ஓவியமாய் தெரிந்தாயோ ?! …
உன்னுதட்டு பள்ளத்தை –
எனக்கு ஒருநாளு தொட்டிலாக்கு …
மங்கையுன் பருவவிளக்கில் –
இவன் மரித்துப்போக விட்டிலாக்கு …
மைவைத்த புருவமுடியை –
இவன் கைவைத்து வருடவா ?! …
கைபடாதா உன்னழகை –
துளியும் நைபடமால் திருடவா ?! …
காதோரம் மெல்லவந்து –
கண்ணே என் மூச்சுக்காற்றால் –
அதற்கும் கமத்தைநான் தருகவா ?! …
நெத்திப்பொட்டில் பாம்பைவைத்து –
எப்படி கொத்துகிறாய் விழியிரண்டால் ?! … ச
த்தியாமா சொல்லுறேன்டி –
எமனே பித்துப்பிடிப்பான் உன் முன் இருந்தால் ?! …
என்றும் எழுத்தாணி முனையில் …
கவிஞர். செந்தமிழ்தாசன்
Comments
Post a Comment