ஆதியில் தோன்றி
அகிலத்தை ஊன்றி
நீதியில் வாழ்ந்த நீதாண்டாத் தமிழன்,
பாதியில் வந்த
பகடையர்க்குரிமை பகிர்ந்தளித்தாயே
அதில் நீ வழுக்கன்!
பாரினிலெவனும் பரிதவித்தாலும்
முதற்கண் சிந்திடும் மூத்தவன் தமிழன்,
ஆரிறுகோடி சிதைந்ததனாலே
அடிமையான அவலன் தமிழன்!
நாகரிகத்தை உலகிற்களித்தாய்
நல்லறிவினையே குறளில் உதிர்த்தாய்,
வீரக்காவியம் நீயும் படைத்தாய்
செம்மொழி இலக்கணம் நயமாய் வடித்தாய்!
மண்ணை உழுது விதையை விதைத்தாய்
மனதை உழுது மனிதம் விதைத்தாய்,
ஏட்டை உழுது பாட்டை விதைத்தாய்
எதிரியை உழுது வெற்றிகள் படைத்தாய்!
அகிலம் போற்ற வாழ்ந்த தமிழன்
ஒற்றுமையற்று உடைந்ததனாலே
மூத்தகுடியோ தாழ்ந்தது
இன்று முகவரிகூட தொலைந்தது இழுக்கு!
தமிழ்த்தாய் என்றால் பிறக்கணும்
பக்தி தமிழனென்றால் உரைக்கணும்
புத்தி உலகை ஆள இருக்குது சக்தி
ஒன்றாய் வாழ்ந்து அடைந்திடு முக்தி! –!!
Comments
Post a Comment