அழகாய் பிறந்தால்-vaalkai varikal

அழகாய் பிறந்தால்,

நடிகையாகலாகம்

மாடலிங் செய்யலாம்

தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கலாம்

விமான பணிப்பெண்ணாகலாம்

நட்சத்திர விடுதிகளில் வரவேற்பு பொம்மையாகலாம்

குறைந்த பட்சம்


உள்ளூர் எம்.எல்.ஏவுக்கு விருது வழங்கும் விழாவில்
பொன்னாடை ஏந்திவரும் மேடைப் பெண்ணாகலாம்

எட்டாம் வகுப்பு ஃபெயிலாகி
எறுமை மேய்த்து அறுவடை வயலில்
சிந்திய கதிர் பொறுக்கி வெயிலையும்
ஆடையாக உடுத்தும்

அக்காவை பிள்ளைகள் கேட்கிறார்கள்

“அம்மா நீ ஏன் டி.வி – ல வரமாட்டேங்குற”?

Comments